லெபனானில் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நசருல்லா கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
ஹசன் நசருல்லா இனிமேலும் உலகை அச்சுறுத்தமாட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டின் டகியே நகரில் பொதுமக்களின் இருப்பிடங்களிற்குள் அமைந்திருந்த ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தின் மீது ஜெட்தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.