பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பதில் தங்கள் அரசாங்கம் இன்னும் அதிகமாகவும் வலுவாகவும் செயற்பட வேண்டும் என தாய்வான் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாராளுமன்றத்திற்கு வெளியே கூடிய ஆர்வலர்கள் பல கோரிக்கைகளையும் முன்வைத்து கவணயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுப்பட்டனர்.
சீன கட்டுப்பாடுகளிலிருந்து சுதந்திரம் கோரி பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்புகளை வெளியிட்டனர்.
பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் தாய்வான் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
குறிப்பாக நான்கு தாய்வான் விளையாட்டு வீரர்கள் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தாய்வானின் சுதந்திரம் உறுதிப்படுத்தவும் சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
சீன அரசாங்கம் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்தியபோது அதன் மனித உரிமைகளை மேம்படுத்துவதாக உறுதியளித்த போதிலும், நாட்டில் நிலைமைகள் 2008 ஐ விட மோசமாக உள்ளது என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தாய்வான் தனது அதிகாரிகளை விளையாட்டுகளுக்கு அனுப்பவில்லை என்றாலும், அதன் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவித்துள்ளது.
இந்த நிகழ்விற்கு அரசியலைப் பயன்படுத்த வேண்டாம் என்று தாய்வான் சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மறுப்புறம் பெய்ஜிங் சீனாவில் செயற்பாட்டாளர்களை துன்புறுத்தியதாலும், கடந்த ஆண்டு தாய்வானின் வான்வெளியில் அத்துமீறி நுழைவதற்கு 900க்கும் மேற்பட்ட சீன இராணுவ ஜெட் விமானங்களை அனுப்பியதாலும் தாய்வான் கடும் அதிருப்திகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]