பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வந்த 600 கற்பழிப்பு மிரட்டல்கள்
பிரித்தானியா நாட்டை சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரே இரவில் 600க்கும் அதிகமான கற்பழிப்பு மிரட்டல்கள் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர் ஜெஸ் ஃபிலிப்ஸ்.
Yardley நகரின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘தனக்கு 19 வயதாக இருந்தபோது நபர் ஒருவர் தன்னை கற்பழிக்க முயன்றதாகவும், கடுமையான போராட்டத்திற்கு பின்னர் அவரை தாக்கிவிட்டு தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் வெளியான பிறகு, ட்விட்டரில் தன்னை கற்பழிக்க போவதாக சுமார் 600க்கும் அதிகமான நபர்கள் ஒரே இரவில் கிண்டலாக மிரட்டல்களை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு நேர்ந்த இந்த கொடுமை வேறெந்த பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக தற்போது பெண்கள் மீதான கற்பழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுப்பட்டு வருவதாகவும் ஜெஸ் ஃபிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், சமூக வலைத்தளங்களில் ஜெஸ் ஃபிலிப்ஸ் குறித்து பலவகையான கிண்டல் பதிவுகள் வெளியாகி வருவதால் தான் மிகவும் மன உளைச்சலில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
To see the attack of a pack on here check out my mentions 600 odd notifications talking about my rape in one night. I think twitter is dead