ராஜ் மற்றும் டிகே என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் இந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளியான வெப்சீரிஸ் பேமிலிமேன். மும்பை குண்டு வெடிப்பை மையமாக கொண்ட உருவாக்கப்பட்ட வெப் சிரிஸில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இதன் இரண்டாவது சீசன் வரும் ஜூன் மாதம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.
நடிகை பிரியாமணி இந்த வெப்சீரிஸில் நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சாதாரண குடும்பத் தலைவராக இருந்துக் கொண்டே இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதிகளை ஸ்ரீகாந்த் திவாரி எப்படி சமாளிக்கிறார் என்பதை மையமாக வைத்து இந்த வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் வில்லியாக நடித்துள்ளார்.
நடிகை சமந்தா. ராஜி எனும் தற்கொலைப் படையை சேர்ந்த நபராக நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த சீரிஸின் டிரைலர் இன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் முன்னோட்டத்தில் ஈழ மக்களையும் புலிகளையும் தவறாக காட்டியுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனை தொடர்ந்து பேமிலி மேன் சீரிஸிற்கு எதிராக ட்விட்டரில் ஹேஸ்டாக்குகள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.