பெண்ணை கொன்று எரித்த பொலிஸ் உயர் அதிகாரி: பதற வைக்கும் பின்னணி காரணம்
சீனா நீதிமன்ற பொலிஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மங்கோலியா பகுதியில் பொலிஸ் உயர் அதிகாரியாக பணியாற்றிய ஜாவோ லிபிங் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜாவோ லிபிங்கின் ஊழலை அம்பலப்படுத்தி விடுவேன் என அவரது மனைவி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாவோ லிபிங் தனது மனைவியை கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்து, பின்னர் உடலை எரித்துள்ளார்.
மேலும், ஜாவோ லிபிங் ஊழல் செய்து பல லட்ச டொலர் சம்பாதித்ததாகவும், தனது அலுவலகத்தில் சட்ட விரோதமாக டெட்டனேட்டர்களை பதுக்கி வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
எனினும், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் லிபிங் மறுத்தார். இந்நிலையில், வழக்கு குறித்து ஷான்சி மாகாண நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.