பெண்கள் மீது பாலியல் வன்முறை? நெருங்கிவரும் ஆபத்து! இலங்கைக்கு ஆதரவாக பிரித்தானியா?
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக பிரித்தானிய செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் பேரவை அமர்வுகள் தொடங்கவிருக்கின்றன.
இந்நிலையில் இலங்கைக்கு எதிராக இதில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இலங்கை குறித்து சூடான விவாதங்கள் இடம்பெறவுள்ளதாகவும், இந்த அமர்வில் இலங்கை அரசாங்கத்திற்கு பாதகமான சில முடிவுகள் எடுக்கப்படலாம் என நம்பப்படுகிறது.
இலங்கையில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக இராணுவத்தினர் பயன்படுத்தியிருந்தனர் என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்து.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்கவும் இலங்கை இராணுவத்தினர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பது குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
இதேவேளை இலங்கையின் நிலைகுறித்த யஸ்மின் சூக்கா தன்னுடைய அறிக்கையையும் சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கை விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கு மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை மனிவுதரிமைகள் ஆணைக்குழுவினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.
இதற்கிடையில், இலங்கை அரசாங்கம் தேவையான அளவு கால அவகாசத்தை கோரியிருப்பதாக தெரியவருகிறது.
இதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளில் ஏற்படும் விவாதங்கள் குறித்தான முடிவுகளிலேயே தங்கியிருக்கிறது.
ஆனால், பிரித்தானிய அரசாங்கம் இந்த விடையத்தில் இலங்கைக்கு ஆதரவினை தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் பிரித்தானிய பிரதமர் இந்த விவகாரம் குறித்து உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என இணையங்கள் வழியாக பிரித்தானிய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
முன்னதாக, இலங்கைக்கு கால அவகாசத்தை ஐக்கிய நாடுகள் சபை வழங்க நினைத்தால், ஒரு குழு அமைத்ததன் பின்னர் வழங்கப்பட வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இராசவரோதயம் சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.