பெண்கள் கருத்தரித்திருக்கும் காலகட்டத்தில் இனிப்பு சுவையுடன் கலந்த கார்பனேட்டட் குளிர்பானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதை புறக்கணித்து குளிர்பானத்தை நாளாந்தம் அருந்தி வந்தால் அவர்களுடைய வாரிசுகளுக்கு ஏ டி ஹெச் டி எனப்படும் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக பெண்கள் கருவுற்றிருக்கும் காலகட்டத்தில் அவர்கள் மகப்பேறு மருத்துவ நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர், உடற்பயிற்சி நிபுணர் ஆகியோரின் ஆலோசனையுடன் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இந்த காலகட்டத்தில் கார்பனேட்டட் குளிர்பானத்தை அருந்தினால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எட்டு வயதாகும் போது ஏ டி ஹெச் டி எனப்படும் கவனக்குறைவு ஹைபராக்டிவிடி குறைபாடு என்ற பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கிறார்கள். அந்த வயதிலுள்ள பிள்ளைகளுக்கு இத்தகைய பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் ஏற்படுவதும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பான தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக பெண்கள் கருத்தரித்திருக்கும் காலகட்டத்தில் இனிப்பு சுவையுடன் கூடிய கார்பனேட்டட் குளிர்பானத்தை அருந்துவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதையும் கடந்து பெண்கள் கருவுற்றிருக்கும் தருணத்தில் இத்தகைய குளிர்பானத்தை நாளாந்தம் அருந்தினால், அவர்களின் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியில் சமசீரற்ற தன்மை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என எச்சரிக்கிறார்கள்.
டொக்டர் ஸ்ரீதேவி
தொகுப்பு அனுஷா.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]