தனியாக உள்ள பெண்களை விட தனியாக உள்ள ஆண், தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.ஐசிஎம் என்ற அமைப்பு உணர்ச்சி மற்றும் உறவு என்பது தொடர்பாக 4054 பேரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இதில் திருமணமாகாதவர்களின் சுதந்திரம், பொழுதுபோக்குக்கு கிடைக்கும் நேரம், உடல் தொடர்பு ஆகியவை குறித்து கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் திருமணமாகாத 1,418 பேரும் பங்கேற்றனர். இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாவது: திருமணமாகாத 71 சதவீத ஆண்கள் தங்கள் இணையை தேர்ந்தெடுப்பதில் அதிகளவு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
இது பெண்களிடம் 58 சதவீதமாக உள்ளது. 65 வயதுக்கும் அதிகமானவர்களை விட 18 முதல் 24 வயதினர்களே அதிகம் பேர் தனிமையில் இருப்பதாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். தங்களுக்கு உறவு வட்டாரம் இல்லை எனில் பெண்களை விட ஆண்களே அதிகளவு தனிமையால் பாதிக்கப்படுகின்றனர்.
தனியாக உள்ள பெண்களை விட தனியாக உள்ள ஆண்களே, தான் தனிமைபடுத்தப்பட்டதாக அதிகளவு உணர்கின்றனர்.
தனிமையில் இருப்பதுபற்றிய உணர்வு ஒட்டு மொத்தத்தில் 77 சதவீதம் பேரிடம் உள்ளது. பெண்கள் பெரும்பாலும் ஆழமான நட்புக்கே முதலிடம் தருகிறார்கள். இது ஆண்களிடம் குறைவு. அதேசமயம், பெண்களை விட தனிமையில் உள்ள ஆண்கள்தான் அதிகளவு மகிழ்ச்சியாக உள்ளதாக உணர்கின்றனர். மேலும் தனிமை காரணமாக பெண்களை விட ஆண், தான் அதிகளவு உடல் ரீதியான தொடர்பை இழப்பதாக கருதுகிறார்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.