பெண் என்பவள் யார்?
ஒரு பெண் என்பவள் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவாள். அவள் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறாள், அவள் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,….. பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறாள்.
அவள் தன் கணவனின் ஆசைகள் மற்றும் குழந்தைகக்காக படிப்பு, திருமணம் என எந்தவித குறையும் இல்லாமல் வைக்க தன்னையே தியாகம் செய்கிறாள். அவள் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தந்தை கணவன், தன் முதலாளி ஆகியோரின் திட்டுகளை கேட்க வேண்டியுள்ளது.
எல்லா தந்தையும் கணவனும் முதாலாளியும் அவளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர். இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவள் வாழ்க்கை முடிகிறது.
ஆண்கள் உங்கள் வாழ்வில் ஒவ்வொரு பெண்ணையும் மதியுங்கள். அவள் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளாள் அவளுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவளிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.
பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்.