பெண் வேட்பாளர் ஒருவர் போலி வாக்குச் சீட்டுடன் தேர்தல்
திணைக்கள அதிகாரிகளால் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக் கப்பட்டார் என்று
தெரிவிக்கப்பட்டது.
கரைச்சிப் பிரதேச சபைக்குப் பரந்தன் வட்டாரத்தில்
போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்
ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக வியாபார நிலையம் ஒன்றை
அலுவலகமாக பயன்படுத்தியமை மற்றும் போலி மாதிரி வாக்கு
சீட்டுக்களை வைத்திருந்தமை போன்ற குற்றச் சாட்டுக்கள் அவர்
மீது சுமத்தப் பட்டுள்ளன.
அவர் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்ப டைக்கப்பட்டு
விசாரணைக ளின் பின்னர் விடுவிக்கப் பட்டுள்ளார் . அவரிடம்
இருந்த போலி வாக்குச் சீட்டுக ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.