இந்நாட்டின் பூர்வீக குடிகளான சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கால் நீட்டி இருக்க முடியாத அளவுக்கு எமது நாட்டைச் சூழவும் வெளிநாட்டவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடன் சுமையைக் காட்டி நாட்டு மக்களை ஏமாற்றி நாட்டின் முக்கிய தளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் இந்தியாவுக்கு, திருகோணமலைத் துறைமுகம் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுக்கும் விற்பனை செய்துள்ளது. இவ்வாறு இலங்கையைச் சுற்றியும் வெளிநாட்டவர்கள் தான் ஆக்கிரமித்துள்ளனர்.
தான் பட்டதை விடவும் பலமடங்கு கடனை இந்த அரசாங்கம் பட்டுள்ளதாகவும் இருப்பினும், நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதை விட எந்தப் பயனையும் காணவில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கூறினார்.