பூமியை தாக்க வரும் வேற்றுகிரகவாசிகளின் அபாய மணி சத்தம்!
பெருபான்மையானோர் இதனை உருவாக்குபவர்கள் வேற்றறுகிரகவாசிகள் என ஆணித்தரமாக அடித்து கூறுகின்றனர். உண்மையில் அவ்வாறான மிகப்பெரிய அளவிலான வட்டங்களை மனிதர்களால் உருவாக்கமுடியாது தான்.
ஆனால் நாம் இன்று பார்க்கபோகும் விடயம் உண்மையில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தவள்ளது. கடந்த 2002ல் ஆகஸ்ட் 15ம் திகதி இங்கிலாந்தில் உள்ள Sparsholt – Hampshire என்ற இடத்தில் ஒர் பிரம்மாண்ட பயிர்வட்டம் உருவானது. ஆனால் இந்த பயிர் வட்டம் சற்று வித்தியாசமாக அமைந்திருந்தது.
குறிப்பாக பயிர் வட்டங்கள் கணிதவியல் குறியீடுகள் அல்லது மர்ம குறியீடுகளை காட்சிபடுத்துவதாக அமையும் ஆனால் இது வேற்றுக்கிரகவாசிகளின் உருவத்தை அப்படியே தெட்டத்தெளிவாக காட்டியது. இது பார்ப்பதற்கு தத்ரூபமாக 3D Painting போல மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்டிருந்தது.
கோவமான பார்வையுடன் கையில் வட்டமாக எதையோ காட்டுவது போல் அந்த உருவம் அமைந்திருந்தது. இந்த உருவம் மனித குலத்திற்கு எவ்வாறான கருத்தை முன்வைக்கின்றது என்பதை ஆராய்சியாளர்கள் மிகுந்த சிரமத்தின் பின் கண்டுபிடித்தனர். அது “8 Bit Binary Code ASC II” எனும் கணணிமொழியில் அமைந்திருந்தது. அது கீழ் கண்டவாறு அமைந்திருந்தது.
“Beware the bearers of false gifts and their broken promises. Much pain, but still time. Believe there is good out there. We oppose deception. Conduit closing. Ding(bell sound)”
அதன் தமிழ் ஆக்கம் :
எங்களின் எதிரிகள் ஏமாற்றுக்காரர்கள், பொய்யான வாக்குறுதிகளையும், பொய்யான பரிசுகளையும் கண்டு ஏமாற வேண்டாம், அதிக வலியிருந்தாலும் இன்னும் நேரம் இருக்கின்றது, அவர்களிடமிருந்தும் விலகியிருப்பது நன்மை. (கடைசியாக மணியின் சத்தம்) என அமைந்திருந்தது.
இதனை மனிதர்கள் தான் மேற்கொண்டிருப்பார்களா? என சிந்தித்தால் அதுவும் தோல்வியில் தான் முற்றுப்பெற்றது. காரணம் இதனை மனிதர்கள் தயாரித்திருப்பதற்கான காரணம் எந்த கோணத்திலும் கிட்டவில்லை.அப்படியென்றால் வேற்றுகிரகவாசிகள் தான்.
அவர்களுக்கு உண்மையில் யார் தான் எதிரி? என்ற கேள்வியும் யுகிக்க தோன்றுகின்றது.