அமெரிக்காவின் புளோரிடா மாநில மியாமிக்கு அருகே 12 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்தமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த தகவலை மியாமி-டேட் கவுண்டி மேயர் டேனியல் லெவின் காவா உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பில் உறுதிபடுத்தியுள்ளார்.
156 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில் மூன்றாவது நாளாக தேடல் முயற்சிகள் தொடர்ந்த நிலையில் உள்ளது.
இடிபாடுகளில் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட உடல்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களது உறவினர்களுக்கும் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மியாமி கடற்கரை ஒரத்தில் அமைந்துள்ள 12 மாடி சாம்ப்லைன் டவர்ஸ் தெற்கு கட்டிடத்தின் ஒரு பெரிய பகுதி திடீரென சரிந்து விழுந்தது.
கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது. கட்டிடத்தில் சமீப நாட்களாக புனரமைப்பு பணிகள் நடந்து வந்தாகவும் கூறப்படுகிறது.