புல்லரிப்பை ஏற்படுத்தும் அறிக்கைகளை தொடர்ந்து கோமாளி அலங்காரங்கள் கடை அலுமாரிகளிலிருந்து அகல்கின்றன.
கனடா-கனடியன் ரயர் நிறுவனம் கோமாளி-சம்பந்தப்பட்ட ஹலோவின் அலங்காரங்களை அதனது அலுமாரிகளிலிருந்து அகற்றுகின்றது.
கனடா மற்றும் யு.எஸ்.ஆகிய நாடுகளில் கோமாளிகள் குறித்த அறிக்கைகள் வெளிவந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடியன் ரயர் நிறுவனத்தின் வலைத்தளத்திலும் இவை கிடைக்கமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோமாளி சேட்டைகள் கடந்த மாதம் நாடு பூராகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் மாத ஆரம்பத்தில் டர்ஹாம் பிரதேசத்தில் கோமாளி-சம்பந்தப்பட்ட 31 புகார்கள் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத ஆரம்பத்தில் டவுன்ரவுன் தொடக்கப்பள்ளியில் கோமாளி உருவம் கொண்ட இரு வாலிபர்களை ரொறொன்ரோ பொலிசார் காவலில் வைத்தனர்.
ஒசிங்டன்அவெனியு மற்றும் டன்டாஸ் வீதியில் அமைந்துள்ள போப் பிரான்சிஸ் கத்தோலிக்க பாடசாலை இளம் மாணவர்களை கோமாளி போன்று ஆடையணிந்த வாலிபன் கண்ணீர் விட வைத்ததாக பெற்றார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் ஒசாவாவில் மூன்று இளைஞர்கள் கோமாளி முகமூடி அணிந்து பலரை பயமுறுத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.