புலிகளின் தலைவர் கொல்லப்படவில்லை என்ற செய்தி விரைவில் தென்னிலங்கையில்?
விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டார்கள் என்று இதுவரை காலமும் இலங்கை அரசியல் தரப்பு கூறிக்கொண்டு வந்தது.
ஆனாலும் தற்போது நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது அதன் காரணமாக விடுதலைப் புலிகள் மீண்டும் கொண்டு வரப்படுகின்றார்கள்.
இதற்காக இலங்கையில் ஆட்சியில் மஹிந்தவின் தோல்விக்கு பிறகு புலிகள் என்ற கருத்து வலியுறுத்தி கூறப்பட்டது. தொடர்ந்து சிறிது சிறிதாக அந்தக் கருத்து வலுப்பெற்று வரத்தொடங்கியது.
தற்போது விடுதலைப் புலிகள் அழிக்கப்படவில்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் மாத்தறை, வெலிகம பகுதியில் இடம் பெற்ற கூட்டத்தின் போதே மஹிந்த இதனை மேடையில் கூறினார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய போது மஹிந்த,
விடுதலைப் புலிகளை முழுவதுமாக அழிக்கவில்லை அவர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள், அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து விடுவார்கள். இதனை நாம் கடந்த காலம் முதல் இன்று வரை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்தோம்.
அதனாலேயே வடக்கில் இராணுவம் நிலைகொள்ள வேண்டிய தேவை இருந்தது. இராணுவம் எப்போதும் அவதானத்துடன் இருக்க வேண்டியும் இருந்தது என்றும் மஹிந்த தெரிவித்தார்.
பிரபாகரனின் மரணம் உட்பட கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்றுவரை வெளிப்படுத்தப்படாத இரகசியமான 2009ற்கு பின்னர் இன்றுவரைகாணப்பட்டு வருகின்றது.
உண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்படவில்லை என்பதை மஹிந்த மறைமுகமாக கூறிவிட்டார் என்ற பலத்த சந்தேகத்தினை அவருடைய உரை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்குனர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இந்த கூற்றை வலுப்படுத்தும் வகையில் இன்னுமோர் கருத்தை மஹிந்த தெரிவித்தார் அதாவது,
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பிரபாகரன் கொல்லப்பட்டார், அவரது சடலத்தை நீங்கள் பார்த்தீர்களா? என கேள்வி ஒன்றினை முன்வைத்திருந்தார்.
அதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச,
பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனோநிலையில் அப்போது தாம் இருக்கவில்லை என்று கூறினார். இவை விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்படவில்லை என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது.
யுத்த காலகட்டத்தில் நாட்டில் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்தவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச இலங்கை வரலாற்றில் அதி முக்கியமான விடயமான விடுதலைப் புலிகளின் தலைவர் மரணத்தை உத்தியோக பூர்வமாக தெரிவிக்காமல் இது வரையில் மௌனம் காத்தார். தற்போது வெளிப்படையாக மஹிந்த கூறிவிட்டார்.
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களும் கொல்லப்படவில்லை என்பதனை கூடிய விரைவில் மஹிந்த வெளிப்படுத்துவார் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை யுத்தம் முழுவதுமாக நிறைவு பெறவில்லை என்பதனை அறிந்திருந்த போதும் மஹிந்த வெற்றியை அறிவித்து விட்டார் என்று பொன்சேகா ஏற்கனவே தெரிவித்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி மஹிந்தவை முடக்க மைத்திரி, அல்லது அரசியலில் மாற்றம் ஏற்படுத்த மஹிந்த இருவரில் ஒருவர் பிரபாகரனின் மரணம் தொடர்பில் வெளிப்படுத்துவார்கள் என்றே கூறப்படுகின்றது.
மேலும் இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும் வரையிலேயே மஹிந்த காத்துக்கொண்டிருந்ததாகவும் அதனாலேயே இதுவரை மறைமுகமாக கூறப்பட்டு வந்தவை பகிரங்கமாக அறிவித்து வருகின்றார் என்றும் கூறப்பட்டு வருகின்றது.