புற்று நோயுடன் போராடி தோற்ற 4-வயது சிறுவனுக்கு சுப்பஹீரோ வழி அனுப்புதல்!
கனடா-ஒன்ராறியோவை சேர்ந்த நான்கு வயது பையன் மேசன் மக்ரி புற்று நோயுடன் போராடி தோல்வியடைந்து மரணமானான். இச்சிறுவனை வழியனுப்ப நூற்றுக்கணக்கான மக்கள் சுப்பஹீரோ போன்று ஆடைகள் அணிந்து கல்லறைக்கு செல்லும் வீதியில் நின்று அவனிற்கு சல்யூட் அடித்து வழிஅனுப்பினர்.
Belle River .ஒன்ராறியோவை சேர்ந்த இச்சிறுவன் இரண்டு வயதில் embryonal rhabdomyosarcoma எனப்படும் ஒரு அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டான். இப்புற்று நோய் முன்னிலை சுரப்பி அல்லது சிறுநீர்ப்பை சுவரிலிருந்து உருவாகின்றது.
இவனது முகநூல் பக்கத்தில் superheroபோன்று ஆடை அணிந்து வீதியில் வரிசையில் நின்று மேசனிற்கு சல்யூட் அடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
சிறுநீர் கழிக்க தங்கள் மகன் கஷ்டப்பட்டதை தொடர்ந்து 2015-ஏப்ரலில் சன்ரெல் பேகனும் லெயின் மக்ரியும் தங்கள் மகனை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். அங்கு இவனது சிறு நீர்ப்பைக்கு எதிராக எட்டு-சென்ரி மீற்றர் அளவிலான கட்டி தள்ளுகின்றதென கண்டுபிடிக்கப்பட்டது.
ஏப்ரல் 2016-ல் இவனிற்கு 12-மணித்தியால சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கட்டியை வைத்தியர்கள் வெற்றிகரமாக வெளியேற்றினர். தொடர்ந்து இவனிற்கு ஹீமோதெரபி கொடுக்கப்பட்டது.யூன் ஆரம்பத்தில் புற்றுநோய் மீண்டும் வந்து விட்டதாக பெற்றோர்களிற்கு அறிவிக்கப்பட்டது.
புற்றுநோய் மேசனின் உடல் பூராகவும் பரவிவிட்டது.
நோயுற்ற காலப்பகுதி முழுவதும் மேசன் சுப்பஹீரோ T-சேர்ட்டும் ஆடைகளும் அணிந்திருந்தான் என பெற்றோர் தெரிவித்தனர்.