புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தையின் உயிரை பலிகொண்ட வைத்தியசாலையின் தவறான மருந்து!
புற்று நோய் சிகிச்சை பெற்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கடந்த வருடம் கியுபெக் வைத்தியசாலையில் மரணமடைந்தது குறித்து புலன்விசாரனை ஒன்றை குறிப்பிட்ட வைத்திசாலை மேற்கொண்டுள்ளது.
23-மாத Ghali El Amrani என்ற குழந்தைக்கு தவறுதலாக மேலதிகமாக ஒரு பொட்டாசியம் ஊசி மூலம் கொடுக்கப்பட்டதால் தங்கள் குழந்தையை தாங்கள் இழந்ததாக அவனது பெற்றோர் தெரிவித்தனர்.
கடந்த யூன் மாதம் நரம்பு மூலச்செல் புற்றுநோய்-ஒரு வகையான புற்றுநோய் குழந்தையின் எலும்பு மச்சையில் பரவியது. கியுபெக்கிலுள்ள CHU செயின்-ஜஸ்ரின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு எலும்பு மச்சை மாற்று சிகிச்கை செய்யப்பட்டதை தொடர்ந்து ஆறு சுற்றுக்கள் கிமோதெரபியும் கொடுக்கப்பட்டது. மேலும் ஐந்து நாட்கள் செய்ய வேண்டும் அதன் பின்னர் வீட்டிற்கு செல்லலாம் என்ற நிலையில் இருந்தான் என அவனது தாயார் ஹாடில் தெரிவித்தார்.
நடைமுறைகளின் பின்னர் ஒரு ஷாட் பொட்டாசியம் பரிந்துரைக்கப்பட்டது. மருத்துவ தாதி இரண்டு ஊசிகள் அவனிற்கு போட வேண்டும்-ஒன்று பொட்டாசியம் மற்றது உப்பு கரைசல்.
ஆனால் தாதி தனது மகனிற்கு இரண்டு ஷாட்கள் பொட்டாசியத்தை ஏற்றியதாக தெரிவித்தார்.
ஆனால் குற்றம்சாட்டப்பட்ட அளவிற்கதிகமான பொட்டாசியம் மகனிற்கு மாரடைப்பை ஏற்படுத்தியதாக தாயார் கூறியுள்ளார்.
இறுதியில் மருத்துவ பணியாளர்கள் அவனது உயிரை காப்பாற்ற முயன்ற போது Ghali நான்கு மாரடைப்புகளால் பாதிக்கப்பட்டான்.
வேறொரு தொகுதிக்கு மாற்றப்பட்டான்.முதலாவது மாரடைப்பை தொடர்ந்து அடுத்து மூன்று மாரடைப்புகளால் தாக்கப்பட்டுள்ளான்.
சிறுவனின் மரணத்தில் மருந்து ஒரு பங்கை வகித்துள்ளதை வைத்தியசாலை ஒப்புக்கொண்டது. ஆனால் நோயின் இந்த நிலையில் கவனிப்பு குழு அங்கத்தவர் எவரையும் குறை சொல்ல முடியாதென கூறப்பட்டது.
நோயாளிகளிற்கு சிகிச்சை அளிக்கும் போது தாதிமார் தெளிவான நெறிமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என இவர்களின் குடும்ப வக்கீல் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். சிகிச்சை அளிக்க முன்னர் எல்லாம் சரியாக இருக்கின்றனவா என இரட்டை சோதனை செய்தல் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர் வைத்தியசாலைக்கு எதிராக ஒரு புகாரை விண்ணப்பிக்க எண்ணியுள்ளனர்.ஆனால் நிதி நட்டஈட்டிற்கும் மேலாக வைத்தியசாலையிடமிருந்து ஒரு மன்னிப்பையும் பதில்களையும் விரும்புவதாக ஹடில் தெரிவித்தார்.