புருண்டி நாட்டு மெய்வல்லுநர் வீராங்கனையான பிரான்சின் நியோன்ஷபா பெண்களுக்கான 2000 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான உலக சாதனையை நேற்றைய தினம் படைத்தார்.
குரோஷியாவின் செக்ரெப் நகரில் நடைபெற்ற ஹென்சகோவிக் ஞாபகார்த்த மெய்வல்லுநர் போட்டியின் பெண்களுக்கான 2000 மீற்றர் ஓட்டப் போட்டியை 5 நிமிடங்கள் 21:56 செக்கன்கள் என்ற நேரப்பெறுதியில் ஓடி முடித்து உலகச் சாதனையை தன்வசப்படுத்தினார் நியோன்ஷபா.
இதற்கு முன்னர் 2017 இல் எத்தியோப்பிய வீராங்கனையான ஜென்சேப் டிபாபா 5 நிமிடங்கள் 23:75 செக்கன்களில் ஓடி முடித்திருந்தமையே உலக சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை புருண்டி நாட்டின் பிரான்சின் நியோன்ஷபா முறியடித்தார்.
இவர், 2016 ரியோ ஒலிம்பிக் மற்றும் 2017 லண்டனில் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றின் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]