போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன, புனானை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய புதிய வீட்டுத்திட்ட கிராமத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.
இத்திட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட 60 வீடுகள், பொதுக் கட்டடங்கள், பாடசாலை, நீர் தாங்கி, மைதானம் மற்றும் அடிப்படைக்கட்டடங்கள் என்பன அமைக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
கட்டார் நாட்டின் கட்டார் ரெட் கிரசன்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் மேற்படி வீட்டுத் திட்டக் கிராமம் அமைக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் தலைவரும், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிறப்பு விருந்தினராக கட்டார் ரெட் கிரசன்ட் அமைப்பின் பன்னாட்டு நிவாரண அபிவிருத்தி அமைப்பின் அதிகாரி ராஸித் ஸாத் அல் மஹாநதி கலந்து சிறப்பித்தார்.