சித்திரை புத்தாண்டு குறித்து சிங்கள மொழியில் பாடப்பட்ட பிரபல பாடல் ஒன்றை திரிபுபடுத்தி பாடிய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரபல பாடகர் ரோஹன பெத்தகேவின் “சூர்ய மங்கல்ய” என்ற பாடலே இவ்வாறு திரிபுபடுத்தி பாடப்பட்டுள்ளது.
திரிபுபடுத்தப்பட்ட பாடல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
நீதிமன்றில் முன்னிலை
இந்த சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண கணனி குற்றப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் வாரியபொல தலாதுஓய பகுதியைச் சேர்ந்த 31 வயதான நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நபர் மதுவரித் திணைக்களத்தில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் இன்று குளியாப்பிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.