2018 ஆம் ஆண்டின் தொடக்க நாளான ஜனவரி 1ஆம் தேதி உலகம் முழுவதும் 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இதில் இந்தியாவிலேயே அதிக குழந்தைகள் பிறந்திருக்கிறது என்றும் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெவ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
குழந்தைகள் பிறப்பு விகித பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவில், 69,070 குழந்தைகளும், சீனாவில் 44,760 குழந்தைகளும் புத்தாண்டில் பிறந்துள்ளன. அடுத்ததாக நைஜீரியாவில் 20,210 குழந்தைகளும் பிறந்துள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.