புத்தபெருமான் முதன்முதலில் தர்ம உபதேசம் நிகழ்த்திய எசல முழு நோன்மதி தினம் இன்றாகும்.
சித்தார்த்த இளவரசர் அனைத்து அரச சுகபோகங்களையும் கைவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய நாளாகவும் இன்றைய நோன்மதி தினம் விளங்குகிறது.
எசல நோன்மதி தினம் இலங்கை பௌத்தர்களுக்கு விசேட தினமாகும்.
847 ஆவது பௌத்த ஆண்டில் கித்சிரி எனப்படும் மன்னர் ஆட்சி செய்த காலத்தில் இளவரசி ஹேமமாலவும் இளவரசரும் விஜயம் செய்ததாகவும் கலிங்க நாட்டிலிருந்து தலதா சிலையை நாட்டுக்கு எடுத்து வந்த நாளும் இந்த எசல நோன்மதி தினமாகும்.
இந்த நோன்மதி தினத்திலேயே தலதா பெரஹரா ஆரம்பமாகின்றது.
துட்டகைமுனு மன்னன் அனுராதபுரம் ருவன்வெலி மகா சேயாவை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியதும் இதுபோன்ற ஒரு நோன்பு தினத்தில் ஆகும் என்று வரலாறு கூறுகின்றது.
இதன் காரணமாக இந்த புனித நாளில் இலங்கையில் உள்ள விகாரைகளில் இன்று பல்வேறு பிங்கம வழிபாட்டுநிகழ்வுகள் இடம்பெறும்.
இதேவேளை ,கதிர்காமம் தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி ரந்தோலி பெரஹரா இன்று இரவு வீதிவலம் சுப நேரத்தில் ஆரம்பமாகும்.
இந்த பெரஹரா கிரிவிகாரை ரஜமஹா விகாரையை சென்றடையும். இம்முறை பெரஹராவை வெற்றிகரமாக நடத்தியதாக குறிப்பிடும் ஏட்டை கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே டிசான் குணசேகர கிறிவிகாரை ரஜமகா விகாரை அதிபதி சங்கைக்குரிய கோதவக்கம் தேரரிடம் கையளிப்பார்.
அதன் பின்னர் மீண்டும் தேவாலயத்திற்கு செல்லும் பெரஹரா பிரதான வீதியின் நுழைவாயில் ஊடாக வள்ளியம்மை தேவாலயத்தை சென்றடையும். அங்கு இடம்பெறும் பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பெரஹரா கதிர்காமம் ஆலயத்தை சென்றடையும். நாளை மாணிக்க கங்கையில் தீர்தோற்சவம் இடம்பெறும்.