முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை சென்றடைந்துள்ளது.

முன்னதாக இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான ஊர்தி பரந்தன் முல்லைத்தீவு வீதி வழியாக சென்று புதுக்குடியிருப்பு நகரை அடைந்து
அங்கிருந்து 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை உச்சம் பெற்ற புதுமாத்தளன் ,அம்பலவன் பொக்கணை , இரட்டைவாய்க்கால் சென்று அங்கிருந்து தற்போது கேப்பாபுலவு ஊடாக முள்ளியவளை சென்று முல்லைத்தீவு நகரை அடையவுள்ளது .



