லக்கல நகரத்திற்குப் பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நகரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(08) வைபவரீதியாக மக்களிடம் கையளிக்கவுள்ளார்.
நவீன வசதிகளைக் கொண்ட புதிய லக்கலை நகரம் லக்கலையின் எழுச்சி என்ற செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மொரகஹகந்த- களுகங்கை திட்டத்தில் நீரில் மூழ்கிய நகருக்குப் பதிலாக இந்நகர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
புதிய வீடுகள், பாடசாலை, மருத்துவமனை, பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், விளையாட்டு மைதானம், பஸ் தரிப்பிடம், பொதுச்சந்தை, வீதி கட்டமைப்பு உட்பட அரச நிறுவனங்களின் கட்டடங்களையும் இந்நகரம் உள்ளடக்கியுள்ளது.
ஜனாதிபதி பதவியேற்று நான்கு வருடங்கள் பூர்த்தியையொட்டி லக்கல புதிய நகரம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.