புதிய பாதுகாப்புச் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகொண்டா(Sampath Thuyacontha) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால்(Anura Kumara Dissanayake) நியமிக்கப்பட்டுள்ளார்.
துயகோந்தா 33 வருடங்களுக்கும் மேலான சேவையை முடித்து 2021 நவம்பர் 26 அன்று இலங்கை விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றார்.
கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர்
1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் பிறந்த துயகொண்டா, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவராவார்.
தேசிய மக்கள் சக்தியில் (NPP) இணைந்ததற்காக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டாவை முந்தைய அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது.
ஓய்வு பெற்ற ஜெனரல் கமால் குணரத்ன
இதுநாள்வரை பாதுகாப்பு செயலாளராக சிறிலங்கா இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஜெனரல் கமால் குணரத்ன(kamal gunaratne) கடமையாற்றி வந்தார்.
இவரை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நியமித்திருந்தார்.
மக்களின் போராட்டங்களை அடுத்து கோட்டாபய பதவி விலகி ரணில் விக்ரமசிங்க(ranil wikremesinghe) ஜனாதிபதியாக பொறுப்பேற்ற போதும் பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றத்தை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.