லங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் பலன் அளிக்கப்போவதில்லை என முன்னாள் வீரரும் சர்வதேச நடுவருமான குமார் தர்மசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டிற்கு புத்துயிர் அளிப்பதற்கு சாத்தியமான மூலோபாயம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலமாக மிகமோசமான விதத்தில் நடைமுறைப்படுத்த திட்டங்களே இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைக்கு காரணம் எனவே இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான பொருத்தமான திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டிய நேரம் இது இனியும் தாமதமானால் இலங்கை கிரிக்கெட் மேலும் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக கிரிக்கெட் கடந்த சில வருடங்களில் பெரும் மாற்றங்களை சந்தித்துள்ளது இதனால் தொழில்நுட்பங்களை பயன்படுத்தவேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாடசாலை கழக மாகாணங்களிற்கு இடையிலானபோட்டிகளின் தரத்தை முன்னேற்றவேண்டும் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்களை செய்தால் ஐந்து வருடங்களில் முன்னேற்றத்தைகாணமுடியும் என தெரிவித்துள்ள குமார் தர்மசேன உரிய தலைவர் ஒருவர் இல்லாதது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.