புதிய கூட்டணியை அமைப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது.
இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகுமென பெரும்பாலான கட்சிகள் கூறி வருகின்றன.
இந்நிலையிலேயே இந்த இரு கட்சிகளும் புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக 5 கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தன. எனினும் எந்ததொரு தீர்க்கமான முடிவுகளும் இதுவரை எட்டப்படவில்லை.
இந்நிலையிலேயே இரு கட்சிகளுக்கும் இடையில் கடந்த 17ஆம் திகதி 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.