புதிய அரசியல் யாப்பொன்று நாட்டுக்குத் தேவையற்றது என தெரிவித்து அஸ்கிரிய பீடம் மற்றும் மல்வத்து பீடம் என்பவற்றின் மகாநாயக்கர்கள் இணைந்து விசேட அறிவித்தல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளனர்.
புதிய அரசியலமைப்பொன்றோ அல்லது அரசியல் யாப்பு சீர்திருத்தங்களோ நாட்டுக்கு தற்பொழுது அவசியமற்றது எனவும் அவ்வறிவித்தலில் கூறியுள்ளார்.
இரு பீடங்களினதும் மகாநாயக்கர்களின் தலைமையில் நேற்று தலதா மாளிகை கூடிய பிரதான சங்க சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரம் அவ்வாறே இருக்க வேண்டும். ஒரு தொகுதி தேர்தல் முறைமைதான் ஏற்படுத்தப்பட வேண்டும். நாட்டின் முழு மகாசங்கத்தினரும் இந்த உத்தேச அரசியல் யாப்புக்கு எதிர்ப்பாகும்.
அரசாங்கம் இந்த உத்தேச அரசியல் யாப்பை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். பழைய யாப்பே எமக்குப் போதுமானது எனவும் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் விசேட அறிவித்தலொன்றை விடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மல்வத்து பீட போஷகர் திம்புல்கும்புரே விமலடம்ம தேரர் கூறியுள்ளார்.