புதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகள், எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்வரும் மே மாதம் எட்டாம் திகதி இரண்டாவது அமர்வு கூட்டப்பட்டதும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழு கூடும் என தெரிவிக்க்ப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் லக்ஸ்மன் கரியெல்ல உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மேற்கொண்டு வருவதாகவும் அதேவேளை எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு கூடும்போது, புதிய அரசியல் யர்ப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக செயற்படுகின்றமையினால், கூட்டத் தொடர் முடிவுறுத்தப்பட்டாலும் புதிய அமர்வு ஆரம்பமாகும்போது அரசியலமைப்புச் சபை கூடுவதில் சட்ட ரீதியான பிரச்சினை இல்லை எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நாடாளுமன்ற கூட்டத்தொடர், விசேடமான வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கடந்த 12 ஆம் திகதி முடிவுறுத்தப்பட்டதால், அரச நிறுவனங்கள் பற்றிய தெரிவுக்குழு, அரச கணக்குகள் தொடர்பான தெரிவுக்கு உள்ளிட்ட 10க்கும் மேற்ட்ட குழுக்களின் செய்பாடுகள் செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.