அரசியலமைப்பு செயற்குழுவினால் உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் நோக்கம், மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதாகும் எனவும் நாட்டிலுள்ள எவராவது அதற்கு எதிராகவோ, ஆதரவாகவோ கருத்துத் தெரிவித்தமைக்காக யாரும் குழப்பமடைய தேவையில்லையெனவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருப்பது சட்டமூலமொன்றோ சட்டவரைவொன்றோ அல்ல. எதிர்வரும் சில நாட்களில் பாராளுமன்றத்தில் இந்த அறிக்கை குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெறவுள்ளன.
ஒவ்வொரு கட்சியும் அமைப்புக்களும் முன்வைத்த கருத்துக்கள் மாத்திரமே உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.