நாட்டுப் பற்று இருந்தால் உத்தேச அரசியலமைப்புக்கு எதிராக வாக்களிக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடம் வேண்டுகோள் விடுப்பதாக எல்லே குணவங்ச தேரர் அறிவிப்புச் செய்துள்ளார்.
“இலங்கையை ஒருமித்த நாடாக்காதிருப்போம்- பிரிவினைவாத அரசியலமைப்பு வேண்டாம்” எனும் கருப்பொருளில் தும்முள்ளையிலுள்ள பௌத்த கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டுக்காக குரல் கொடுப்பவர்கள் இனவாதிகளாக பெயரிடப்படுகின்றனர். இந்த இனவாதி என்ற பதத்தை வங்குரோத்து அரசியல்வாதிகளே அறிமுகம் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நாட்டில் வெளிநாட்டுப் பணம் பாரியளவில் தற்பொழுது குவிக்கப்படுவதாகவும், பணத்துக்கு ஏமாந்து நாட்டுக்கும் இனத்துக்கும் எதிராக செயற்பட வேண்டாம் எனவும் தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்