ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீதான தனது நாட்டின் போரை இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளிற்கு எதிரான தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு ஒப்பிட்டுள்ளதை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சாடியுள்ளார்.
ஸ்டாலின் கிராட்டில் நாஜிப்படையினருக்கு எதிரானவெற்றியின் 80வது வருடத்தை குறிக்கும் நிகழ்வில் புட்டின் இந்தகருத்தை வெளியிட்டிருந்தார்.
எனினும் இதனை கடுமையாக சாடியுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் கடந்த வருடம் உக்ரைன் மீதான ரஸ்ய ஆக்கிரமிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அவர் அனைத்து விதமான காரணங்களையும் முன்வைப்பார் ஆனால் பிராந்தியத்தில் ஜனநாயகத்திற்கு எதேச்சதிகாரத்திற்கு ஆதரவளிக்கும் அரசாங்கம் புட்டின் உடையது என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்