புகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமான குழுவின் அறிக்கை போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் கட்டணத்தை நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிப்பது சம்பந்தமான யோசனை அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள தகவல்கள் தெரவிக்கின்றன.
பயணிகள் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை மாத்திரம் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள், பொதிகள் விநியோக சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்வதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அந்த அறிக்கை அமைச்சரவைக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
அமைச்சரவை அனுமதி பெற்றபின்னர் புகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமாக வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.