வடக்கில் சுமார் 8 இலட்சம் பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு, வட மத்திய, மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களின் மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கில் சுமார் 4 இலட்சம் மக்களும் கிழக்கில் சுமார் 2 இலட்சம் மக்களும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்னிலங்கையில் இருந்து புகையிரதம் மூலம் நீர் விநியோகிக்க முடியுமா எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்போது குறித்த விடயம் தொடர்பில், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, முயற்சி எடுப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.