பீகாரில், தண்டவாளத்தை கடந்தபோது, ரயில் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் மற்றும் அம்ரோலி ரயில் நிலையங்கள் இடையே இன்று அதிகாலை பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
சிவான் பகுதியில் வந்தபோது, அங்கு தண்டவாளத்தை கடந்த 5 பேர் மீது ரயில் மோதியது. இதில் 4 பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒருவர் படுகாயம் அடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தண்டவாளத்தை கடந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
பீகாரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பனிமூட்டத்தால் ரயில் வருவது சரிவர தெரிவதில்லை.
இதனால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன.