சீனாவில் பெற்ற மகனையே தாய் ஒருவர் கட்டிப் போட்டு கொடுமை செய்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
சீனாவின் Leiyang நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தாய் ஒருவர் 4 வயது மகனை கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தி அழவைத்தது தொடர்பான புகைப்படத்தை தனது முன்னாள் கணவருக்கு அனுப்பியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாத்தா, பாட்டி உடனடியாக குறித்த இடத்திற்கு சென்று, குழந்தையை மீட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தகவல்கள் தெரிவிக்கையில், குழந்தையின் தந்தை சீனாவின் Qingyuan பகுதியில் வேலை பார்த்து வருவதாகவும், கடந்த 2016-ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
விவாகரத்து பெறப்பட்டதால், குழந்தையை வளர்ப்பதற்கு மாதம் ஒன்றிற்கு 2,000 யுவான் தருவதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கொடுத்து வந்த அவர், இந்த மாதம் 1,000 யுவான் மட்டும் அனுப்பியுள்ளார்.
இதனால் பெரிதும் ஆத்திரமடைந்த குழந்தையின் தாய், உனது மகனை என்ன செய்கிறேன் பார் என்று கூறி, இவ்வாறு கட்டிப்போட்டுள்ளார்.
இதில் 4 வயது சிறுவன் தொடர்ந்து அழுதுள்ளான், மற்றவர்கள் தடுக்க முயன்ற போதும் அவர்களை திட்டியுள்ளார்.
விரைந்து வந்த தகவல் தாத்தா, பாட்டி சிறுவனை பத்திரமாக மீட்டனர், பொலிசிலும் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவரது கணவரை தொடர்பு கொண்ட போது, அவர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.