பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் டெல்ஃபின் லோரென்சானா, இந்த விமானத்தில் மூன்று விமானிகள் மற்றும் 84 இராணுவத்தினர் உள்ளடங்கலாக 92 பேர் இருந்ததாகவும் அவர் உறுதிபடுத்தினார்.
சி -130 என்ற குறித்த விமானம், தலைநகர் மணிலாவிற்கு தெற்கே 1,000 கி.மீ (621 மைல்) தொலைவில் உள்ள ஜோலோ தீவில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.