பிலிப்பைன்சின் தென்பகுதியில் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பயங்கரவாதிகள் மேற்கொண்ட அர்த்தமற்ற கொடுரமான தாக்குதலை மிகவும் வலுவான விதத்தில் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மராவி நகரில் மின்டானோ அரசபல்கலைகழகத்தில் கிறிஸ்தவ ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
குண்டுவெடிப்பு ஆராதனைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியது, காயமடைந்தவர்கள் இரத்தக்காயங்களுடன் நிலத்தில் வீழ்ந்த கிடந்தனர் பல்கலைகழகத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியை உடனடியாக சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பாதுகாப்பு கமராக்களை ஆராய்ந்து வருகின்றனர் .
நகரின் பல பகுதிகளில் புதிய சோதனை சாவடிகளை பாதுகாப்பு படையினர் ஏற்படுத்தியுள்ளனர்.