பிறந்த குழந்தையின் தாயை கொன்ற டாக்டர்: பரிதாபமான சம்பவம்
கர்நாடகாவில் அனுபவம் இல்லாத டாக்டர் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தவறாக சிகிச்சை அளித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர், மேலும், குற்றவாளி டாக்டர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தியுள்ளனர்.
ஸ்ருதி சுவர்ணா(வயது-23), இவரது கணவர் சந்தீப் சுவர்ணா ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.
9 மாத கர்ப்பிணியான ஸ்ருதி, உடல் பரிசோதனைக்காக உடுப்பியில் காந்தி மருத்துவமனையில் உள்ள டாக்டர் சாயாவை அணுகியுள்ளார்.
ஸ்ருதியை பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போது குழந்தை பிறந்துள்ளது, அப்போது டாக்டர் குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்ததுடன் முக்கிய இரத்த நரம்பை வெட்டியுள்ளார்.
ஸ்ருதி உடம்பில் இருந்து இரத்தம் வெளியேற தொடங்கியுள்ளது, அனுபவம் இல்லாத டாக்டர் சாயாவினால் அதை கட்டுப்படுத்த முடியமால் போக, ஸ்ருதி உயிரிழந்துள்ளார்.
பிறந்த குழந்தையின் தாய் ஸ்ருதி உயிரிழந்ததற்கு முழுக்காரணம் டாக்டர் சாயா தான் என தெரிந்தும், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனினும், சமூகவலைதளத்தில் குறித்த சம்பவத்தை பகிரும் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பிறந்த குழந்தையின் தாயை கொன்ற டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவ வேண்டியும் கர்நாடகா அரசை வலியுறுத்தியுள்ளனர்.