இசையின் உலகம் என வர்ணிக்கப்பட்ட பிரெஞ்சுப்பாடகி France Gall, தனது 70 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
பிரெஞ்சு தேசத்துக்கு Doll of wax, doll of her , Resist or Si Maman if போன்ற புகழ்பெற்ற இசை ஆல்பங்களை வழங்கிய பாடகி, கடந்த டிசம்பர் மாதம் முதலே மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார். சில தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர், புற்றுநோய்க்கு எதிராக போராடி வந்துள்ளார். அதைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை 7 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக சிறுவயதிலேயே ஆர்வம் கொண்ட இவர், தனது பால்ய காலத்திலேயே தனது தந்தையுடன் சேர்ந்து பாடல்களை இயற்றினார். இவர் முதன் முதலாக தனது 15 ஆவது வயதில் வெளியிட்ட Do not be so stupid ஆல்பம், அப்போது இரண்டு இலட்சம் பிரதிகள் விற்று சாதனை இமாலய சாதனை படைத்தது.