பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்திடம் போதுமான முன்னேற்றங்களைக் கொண்டிருக்கவில்லை என, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இருந்த போதிலும், தீர்க்கப்படாத 3 பிரச்சினைகள் உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவர் ஜீன் க்குளோட் ஜங்கரும் பிரெக்சிற்றுக்கான ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் மைக்கேல் பார்னியாரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தோரின் உரிமை விவகாரம், எல்லைப் பிரச்சினை, நிதிப் பிரச்சினை ஆகியவற்றில் முன்னேற்றம் காணப்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, பிரெக்சிற் விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட வாக்கெடுப்பு, பிரித்தானியாவுடனான எதிர்கால வர்த்தக உறவு தொடர்பான பேச்சுவார்த்தையில் தாமதத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.