பிரித்தானிய பெண் எம்பி சுட்டுக்கொலை: மனது உருகிய கணவரின் பதிவு
பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி எம்பியான Jo Cox- யின் உயிரிழப்பை தாங்கிக்கொள்ள முடியாத கணவர், தனது டுவிட்டர் பக்கத்தில் மனக்கவலையை தெரிவித்துள்ளார்.
Birstall நகரில் அமைந்துள்ள உள்ளூர் அலுவலகத்திற்கு எம்பி சென்றுகொண்டிருந்தபோது, நபர் ஒருவரால் 3 முறை துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இவரை, பொலிசார் மீட்டு ஹெலிகொப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி 2 மணி நேரங்களுக்கு பிறகு அவர் உயிரிழந்துவிட்டார், இந்த சம்பவம் தொடர்பாக Tommy Mair(52) என்ற நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்பியின் மரணம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரது கணவர் மனதுருகி டுவிட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார், எனது இரு குழந்தைகள் மற்றும் என்னையும் தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.
அதிக சிரமங்கள், அதிக வலிகள், குறைந்த சந்தோஷங்களுடன் கூடிய சோகமான புது வாழ்க்கை எங்களுக்கு ஆரம்பித்துவிட்டது,
நான் வாழும் ஒவ்வொரு நொடிகளையும் அவளுக்காக சமர்ப்பிக்கிறேன், எனது மனைவி, தனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மனத்துயரங்கள் ஏதுமின்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள்.
மேலும் கடந்த 3 மாதங்களாக அவள் தொடர்பாக வெளியான தவறான செய்திகளின் காரணமாக அவர், தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.
மேலும் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஷொப்பிங் கடைகள் நிறைந்த தெருவில் நடைபெற்றுள்ளது, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இதுகுறித்து கூறியதாவது, அந்நபர் எம்பியை தலைமுடியை இழுத்து பிடித்து கத்தியால் குத்துகையில், 70 வயது முதியவர் ஒருவர் தடுக்க முயன்றபோது அவரது வயிற்றிலும் கத்தி குத்துபட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் நலமாக உள்ளார்.
கத்தியால் குத்தி எம்பியை சாய்த்துவிட்டு, துப்பாக்கியை எடுத்து 3 முறை சுட்டார், இதில் ஒரு குண்டு எம்பியின் தலையில்பட்டது என கூறியுள்ளனர்.
பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் பொலிசார் விசாணை நடத்தி வருகின்றனர், ஆனால் அவர் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.