பிரித்தானியா தலைநகர் லண்டனில் அமைந்திருக்கும் பாராளுமன்ற கட்டிடத்தின் வாசலில் நபர் ஒருவர் கத்தியுடன் வந்ததையடுத்து பொலிசார் அவரை கைது செய்தார்கள்.
பிரித்தானியாவின் லண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை அமைந்துள்ளது, இது பாராளுமன்றமாகவும் செயல்படுகிறது.
இதன் வாயிலில் சாம்பல் நிற சட்டை அணிந்திருந்த நபர் ஒருவர் கையில் கத்தியுடன் இன்று காலை சுற்றி திரிந்துள்ளார்.
உடனே சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சந்தேகத்துக்குரிய நபரை துப்பாக்கி முனையில் கைது செய்தார்கள். அவர் கையில் வைத்திருந்த கத்தியையும் கைப்பற்றினார்கள்.
இந்த சம்பவத்தையடுத்து பாதுகாப்பு காரணமாக பாராளுமன்ற கட்டிடம் மூடப்பட்டது.
பாராளுமன்றம் அமைந்துள்ள சாலையிலும் மக்கள் யாரும் நுழைய முடியாதவாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபருக்கு 30 வயதிருக்கும் என தெரிகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.