பிரித்தானியாவை மிரட்டும் டோரிஸ் புயல்: பேரழிவு ஏற்படும் அபாயம்
பிரித்தானியாவில் டோரிஸ் எனும் புயல்காற்று வீசவுள்ளதால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது, டோரிஸ் புயலால் நாட்டில் அதிவேகக் காற்று, மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படக் கூடும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை காற்று 80மைல் வேகத்தில் வீசக்கூடும். இன்று காலை ஐயர்லாந்தில் 87 மைல் வேகத்தில் காற்று வீசியுள்ளதாக பதிவாகியுள்ளது.
இந்த புயலால் பிரித்தானியாவில் மத்திய பகுதி கடுமையாக பாதிக்கப்படக் கூடும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்கள் புயலை எதிர்கொள்ள தயராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.