பிரித்தானியாவில் தபால் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான கட்டணம் 17 சதவீதம் வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது தபால் முறை விண்ணப்பத்திற்கான கட்டணமும், ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கட்டணமும் ஒரே அளவில் உள்ளது.
மூத்தவர்களுக்கு தபால் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான கட்டணம் £72.50-ஆக உள்ளது.
இதை 17 சதவீதம் உயர்த்தி £85-ஆக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதே சமயம் இதை அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால் வெறும் 3 பவுண்ட மட்டுமே உயர்ந்து £75.50 தான் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று குழந்தைகளுக்கான(16 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்) பாஸ்போர்ட் விண்ணப்பம் 27 சதவீதம் அதாவது 12.50 பவுண்ட் உயர்ந்துள்ளது.
இது 46 பவுண்டிலிருந்து £58.50-வரை ஆகும் எனவும், ஆனால் ஆன்லைனில் விண்ணப்பித்தால் 49 பவுண்ட் தான் ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் காலத்தில் மக்கள் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு இப்படி தபால் முறைக்கு அதிக கட்டணமும், ஆன்லைன் முறைக்கு குறைந்த கட்டணமும் நிர்ணயித்தால், மக்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிப்பர்.
இதை ஊக்குவிப்பதற்காகவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இது வரும் மார்ச் மாதம் கடைசியில் நடைமுறைக்கு வரலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.