பிரித்தானியாவில் கனேடிய தமிழர் படுகொலை: துயரத்தில் வாடும் குடும்பத்தினர்
புது வருடத்திற்கு சிறிது முன்னர் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு தனது மூத்த சகோதரனை ஏற்றி சென்று வழி அனுப்பி வைத்தார் சிந்துஷா சுரேஷ். இருவரும் ஒருவரை ஒருவர் கடைசியாக சந்தித்ததும் அன்றுதான்.
பின்னர் லண்டன் இங்கிலாந்தில் இருந்து 85-கிலோ மீற்றர்கள் தொலைவில் மில்ரன் கெய்னெஸ் சுப்பர் மார்க்கெட் வாகன தரிப்பில் சுரேன் சிவானந்தன் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார்.
ஜனவரி 21ல் லண்டன் நேரப்படி அதிகாலை 4மணியளவில் அதிகாரிகளிற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியீடு ஒன்றின் பிரகாரம் தெரிய வந்தது.
32வயதுடைய ரொறொன்ரோ மனிதன் எவ்வாறு தேம்ஸ் பள்ளத்தாக்கில் இறந்தார் என்பது தெளிவாகவில்ல ஆனால் 17-வயதுடைய பையன் உட்பட மூவரை பொலிசார் இக்கொலை சம்பந்தமாக கைது செய்ததாக அறியப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பரந்த பொது மக்களிற்கு ஆபத்து ஏதும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிபிசி ரொறொன்ரோ, தேம்ஸ் பள்ளத்தாக்கு பொலிசாருடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் மேலதிக விபரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர். செயலில் இருக்கும் சட்ட நடிவடிக்கைகள் இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் இருந்து லண்டன் வரை சென்றது இறப்பதற்கு இல்லை என சகோதரி தெரிவித்தார். இச்சம்பவத்தால் அனைத்து குடும்பமும் கலக்கத்தில் உள்ளனர்.
சுரேன் ஜேர்மனியில் வசிக்கும் அவரது இளைய சகோதரிக்கு குழந்தை பிறந்ததால் அவரை பார்க்க பெற்றோருடன் அங்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நண்பர்களை சந்திக்க லண்டன் சென்றார் என சகோதரி தெரிவித்துள்ளார். பெற்றோருடன் ரொறொன்ரோ வருவதற்கு முன்னர் ஜேர்மனி செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோருடன் ரொறொன்ரோ வரவேண்டியவர் வரவில்லை. இவர் ஒரு அற்புதமான சகோதரர் என தெரிவித்த சகோதரர் சுரேஷ் தனது சிறு பிள்ளைகளிற்கு என்ன சொல்வதென திண்டாடிக் கொண்டிருக்கின்றார்.
இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராவார். 2009-லிருந்து மார்க்கம் ரொறொன்ரோ கிரிக்கெட் அணியில் சிவானந்தன் விளையாடியுள்ளார் என கூறப்படுகின்றது. இவரது மரணசடங்குள் பெற்றோரும் சகோதரியும் ரொறொன்ரோ வந்ததும் ஒழுங்கு செய்யப்படும்.