பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர்
கனடாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜை, அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின் ரூடோ மண்டியிட்டு வரவேற்றுள்ளார்.
பிரித்தானியா இளவரசர் குடும்பம் அரச குடும்ப சுற்றுப்பயணமாக கனடா சென்றுள்ளனர். அப்பொழுது விக்டோரிய சர்வதேச விமான நிலையம் வந்த இளவரசர் வில்லியம்ஸ், இளவரசி கேட், குட்டி இளவரசர் ஜோர்ஜ், குட்டி இளவரசி சார்லோட் ஆகியோரை கனடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, அவரது மனைவி சோபி உட்பட பலர் நேரில் வந்து வரவேற்றனர்.
இச்சந்தரப்பத்தில், வில்லியம்ஸ், கேட் ஆகியோரை விட பிறந்து 16 மாதமே ஆன குட்டி இளவரசி சார்லோட், இளவரசர் ஜோர்ஜ் ஆகியோர் பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இளவரசர் ஜோர்ஜை, கனடிய பிரதமர் மண்டியிட்டு வரவேற்ற நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
442 total views, 442 views today
– See more at: http://www.canadamirror.com/canada/70375.html#sthash.Hijq9IgE.dpuf