பிரித்தானியர்கள் இந்த நாடுகளை கண்டிப்பாக தவிருங்கள்: வெளியான எச்சரிக்கை
புத்தாண்டில் பிரித்தானியர்கள் விரும்பிச் செல்லும் உலகின் குறிப்பிட்ட நாடுகளுக்கு பயங்கரவாதிகளால் கடும் அச்சுறுத்தல் எழலாம் எனவும் அந்த நாடுகளை பிரித்தானியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் அவுஸ்திரேலியா, தாய்லாந்து, மாலத்தீவுகள் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.
பிரித்தானிய உள்விவகராத்துறை அலுவகம் வெளியிட்டுள்ள குறித்த எச்சரிக்கை தகவலில், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளான பகுதி என கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
லண்டன், மான்செஸ்டர் மற்றும் பார்சிலோனா உள்ளிட்ட நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் நடந்த நிலையில் குறித்த பயண எச்சரிக்கை தகவல் வெளியிடப்பட்டு வருகிறது.
மதுபான விடுதிகள், உணவகங்கள், ஷொப்பிங் வளாகங்கள் என பொதுமக்கள் அதிகம் புழங்கும் பகுதிகளை பயங்கரவாதிகள் குறிவைக்கலாம் எனவும் அதனால் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும் பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.மிகவும் அச்சுறுத்தல் மிகுந்த 20 நாடுகளின் பட்டியலில், தாய்லாந்து, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து உள்ளிட்ட பிரபல சுற்றுலா நாடுகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் நடத்தப்பட்ட மிக கொடூர பயங்கரவாத தாக்குதல்களில் 7 ஈராக்கில் நடந்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் கண்டிப்பாக தவிற்க வேண்டிய நாடாக ஈராக் மாறியுள்ளது.
இந்த வரிசையில் ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சிரியா மற்றும் பாக்கிஸ்தான் நடுகள் உள்ளன. இந்தியாவும் இதே பட்டியலில் தற்போது இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கடும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நாடுகளில் முதலிடத்தில் துருக்கியும் 4-வது இடத்தில் பிரித்தானியாவும் 5-வது இடத்தில் ஜேர்மனியும் உள்ளன.