பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த போராடிவரும் மீட்பு பணியாளர்களுக்கு உதவும் வகையில் எட்மண்டன் வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
மாகாணத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை நோக்கி தீ தற்போது வேகமாக பரவி வருகின்ற நிலையில், குறித்த பகுதியிலிருந்து கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் சுமார் 30 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதாக சுற்றுச்சூழல் கனடா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலைமையானது எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதற்கு ஒப்பானதாக உள்ளது என அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், நீண்டகால மீட்பு முயற்சிகள் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியுதவின் நிவாரண அமைப்புகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.