பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்கிறார்
-
பிரிட்டனின் பிரதமராக தனக்கு அடுத்தபடியாக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்பார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியிருக்கிறார்.
மேலும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தெரெஸா மே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மே அம்மையார் மட்டுமே இன்னும் போட்டியில் எஞ்சியிருக்கும் ஒரே தலைவர். அவருடன் போட்டியிலிருந்த மற்றொரு பெண் வேட்பாளரான, ஆண்டிரியா லெட்சம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை அமல்படுத்த புதிய தலைவர் விரைவாக தேர்ந்தெடுக்கப்படவேண்டியது தேச நலனுக்கு முக்கியமானது என்று லெட்சம் கூறினார்.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரிட்டிஷ் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் நிராகரித்ததை அடுத்து பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகுவதாக அறிவித்தார்.